Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் 13 ஐபிஎஸ்கள் அதிரடி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

179

தமிழகம் முழுவதும் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு விவரம்:–

1. மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி சுகுணா சிங் – செங்கல்பட்டு எஸ்பி.

2. டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு எஸ்பி நிஷா – மயிலாடுதுறை எஸ்பி.

3. நாமக்கல் எஸ்பி சரோஜ்குமார் தாகூர் – கிருஷ்ணகிரி எஸ்பி.

 

4. கிருஷ்ணகிரி எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி – நாமக்கல் எஸ்பி.

5. கன்னியாகுமரி எஸ்பி பத்ரிநாராயணன் – கோவை எஸ்பி.

6. கோவை எஸ்பி செல்வநாகரத்தினம் – சென்னை போலீஸ் அகாடமி துணை இயக்குனர்.

7. சென்னை, தி.நகர் துணைக்கமிஷனர் ஹரிகிரண் பிரசாத் – கன்னியாகுமரி எஸ்பி.

8. திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனர் அரவிந்த் – சென்னை நுண்ணறிவுப்

பிரிவு துணை ஆணையர் -1.

9. சென்னை போலீஸ் அகாடமி துணை இயக்குனர் ஜெயலட்சுமி – சென்னை நவீன காவல்

கட்டுப்பாட்டு அறை எஸ்பி.

10. சென்னை விரிவாக்க பிரிவு ஏஐஜி அபினவ் குமார் – திருப்பூர் நகர சட்டம் -ஒழுங்கு துணைக்கமிஷனர்.

11. சென்னை நுண்ணறிவுப்பிரிவு துணைக்கமிஷனர் விமலா – சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி.

12. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி பண்டி கங்காதர் – சென்னை டிஜிபி அலுவலகம் நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி.

13. தமிழக ரயில்வே ஐஜி- கல்பனா நாயக் – சென்னை மின் வாரிய பிரிவு (டான்ஜெட்கோ) விஜிலன்ஸ் பிரிவு ஐஜி.

இவ்வாறு உள்துறைச் செயலர் எஸ்.கே .பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.