Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

81

தமிழகத்தில் அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. முதல் மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது. நவம்பர் 1ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்பின், நவம்பர் 4ம் தேதிக்கு பிறகு மழையின் தீவிரம் குறைந்து, பின்னர் மீண்டும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது டிசம்பர் 27ம் தேதி வரை நீடிக்கும் என முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்திருந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.