Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் நெல் கொள்முதலை செப்டம்பர் மாதமே துவங்க வேண்டும்: பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்

stalin wrote letter to pm

76

21 may 2022

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் காலத்தினை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே துவங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அது தொடர்பாக ஸ்டாலின் கடிதம் விவரம் வருமாறு:– தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.80 கோடி செலவில் விவசாய உள்ளீடு தொகுப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிவிவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் தரமான விதைகள் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜூன் இறுதிக்குள் குறுவை நாற்றுப் பணியை முடிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது அனைத்து காரிஃப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்தற்காக இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். பொதுவாக, நெல் அறுவடை செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் நடைபெறும். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் விளைச்சல் இழப்பு அல்லது பெரும் பயிர் சேதத்திற்கு வழிவகுக்கும் என்பதால், இந்த ஆண்டு, முன்முயற்சி நடவடிக்கைகளின் காரணமாக நெல் அறுவடை ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசும், விவசாயிகளும் குறுவை அறுவடை செய்யும் நம்பிக்கையில் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால், தமிழ் விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், நெல் கொள்முதலை அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் துவங்கிட மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்