Take a fresh look at your lifestyle.

தனியார் வங்கியில் ரூ. 36 லட்சம் மோசடி: முன்னாள் ஊழியர் கைது

87

சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் தனியார் வங்கியில் ரூ. 36 லட்சம் மோசடி செய்த முன்னாள் மனிதவள நிர்வாக மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, தி.நகர், G.N செட்டி ரோடு, எண்.34 என்ற முகவரியில் இயங்கி வரும் IndusInd Bank என்ற தனியார் வங்கியில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வரும் சுகுமார் (50). இவர் தனது வங்கியில் கடந்த 2019ம் தணிக்கை செய்த போது, வங்கியில் மனிதவள நிர்வாக மேலாளராக பணியாற்றிய ஆனந்தராஜ் மற்றும் சிலர், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உதவியுடன் வங்கி பணியாளர்களை தேர்வு செய்ததில் ரூ.36,29,246/- செல வானதாக போலியான ரசீதுகளை தயாரித்து மேற்படி வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தி யுள்ளனர் எனவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வங்கி மனிதவள நிர்வாக மேலாளர் வேளச்சேரியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (32) என்பவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆனந்த ராஜ் கடந்த 2018 ம் ஆண்டு முதல் 2019 வரை தனது சக வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களை சேர்ந்த நபர்களுடன் சேர்ந்து வங்கிக்கு, பணி யாளர்க ளை தேர்வு செய்த விதத்தில் செலவானதாக போலியான ரசீதுகளை தயார் செய்து, பணத்தை பங்கிட்டு மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்ற 4 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் நேற்று (03.01.2022) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்ததரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.