62வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டி மற்றும் மாநில அளவிலான கபடி, ஹாக்கி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவல் 112 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை கமிஷனர் சங்கர்ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
62வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டி 2023 (62nd TamilNadu Police Inter Zonal Athletic Meet 2023) போட்டி, திருச்சி, அண்ணா ஸ்டேடியத்தில், 03.03.2023 முதல் 05.03.2023 வரை நடைபெற்றது. இப்போட்டியில் ஓட்ட பந்தயம், தடை தாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், , ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல், மாரத்தான், டெக்கத்லான் மற்றும் எப்ட்த்தலான் ஆகிய தடகள போட்டிகள், மற்றும் கோ-கோ குழுவிளையாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கென தனித்தனியாக நடைபெற்றது. இதில், 1.சென்னை பெருநகர காவல்துறை 2.ஆவடி காவல் ஆணையரகம், 3.தாம்பரம் காவல் ஆணையரகம், 4.வடக்கு மண்டலம், 5.தெற்கு மண்டலம், 6.மேற்கு மண்டலம், 7.மத்திய மண்டலம், 8.ஆயுதப்படை, 9.தமிழ்நாடு கமாண்டோ படை (TNCF) என 9 அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டியில், சென்னை பெருநகர காவல் அணியின் ஆண்கள் அணியினர் 7 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களும், பெண்கள் அணியினர் 14 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என 29 பதக்கங்களும் என மொத்தம் சென்னை பெருநகர காவல் தடகள அணியினர் 21 தங்கப்பதக்கங்கள், 16 வெள்ளி பதக்கங்கள், 10 வெண்கல பதக்கங்கள் என 47 பதக்கங்கள் பெற்று, சென்னை பெருநகர காவல் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்திற்கான கேடயம் பெற்று, சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.
35 வயதுக்கு மேற்பட்ட காவல் துறையினருக்கான தடகளப்போட்டியில் (VETRANS) சென்னை பெருநகர ஆண்கள் அணியினர் 6 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 10 பதக்கங்களும், பெண்கள் அணியனிர் 6 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 15 பதக்கங்களும் என மொத்தம் 12 தங்கப்பதக்கங்கள், 6 வெள்ளிப்பதக்கங்கள், 7 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 25 பதக்கங்கள் பெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர். பெண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் சென்னை பெருநகர காவல் அணியினர் முதலிடம் பெற்றும், ஆண்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தில் சென்னை பெருநகர காவல் அணியினர் 2ம் இடமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 28.02.2023 அன்று சென்னை, ராணிமேரி கல்லூரியில் நடைபெற்ற மாநிலஅளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் சென்னை பெருநகர காவல் ஆண்கள் கபடி அணியினர் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளனர். கடந்த 27.02.2023 முதல் 05.03.2023 வரை மதுரை, திருநகர் ஹாக்கி கிளப் நடத்திய 24 வது மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை பெருநகர காவல் ஆண்கள் ஹாக்கி அணியினர் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளனர்.
சென்னைப் பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் 62வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டி மற்றும் மாநில அளவிலான கபடி, ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 112 சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (10.03.2023) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் லோகநாதன், இணை ஆணையாளர் சாமூண்டிஸ்வரி, துணை ஆணையாளர்கள் அரவிந்த், (நுண்ணறிவுப்பிரிவு), சக்திவேல் (நுண்ணறிவுப்பிரிவு), ராதாகிருஷ்ணன், (தலைமையிடம்), ராமமூர்த்தி (நிர்வாகம்), சௌந்தரராஜன், ராதாகிருஷ்ணன் (AR-2), காவல் அதிகாரிகள், மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.