காவல்துறையில் மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தங்கப்பதக்கம் வென்றார்.
தமிழக காவல்துறையில் 2022 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம் துப்பாக்கிச் சுடுதளத்தில் 08.09.2022ஆம் தேதி முதல் 10.09.2022ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறையில் உள்ள தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், வடக்கு மண்டலம் மற்றும் சென்னை பெருநகர காவல், தலைமையிடம், ஆயுதப்படை மற்றும் பெண்கள் பிரிவு என் மொத்தம் 8 அணிகளில் இருந்து சுமார் 220 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் சென்னை, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு டிஜிபி சைலேந்திரபாபு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.