Take a fresh look at your lifestyle.

டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் 51 திருமணங்களுக்கு முகூர்த்தக்கால் நடும் விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

101

எடப்பாடி பழனிசாமி தலைமையில் டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் பிப்ரவரி 23 ம் தேதி 51 திருமண விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெறவிருக்கிறது.

ஜெயலலிதா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 23 ம் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவில் 51 ஏழை எளிய மணமக்களின் சமத்துவ சமுதாய திருமணத்தை முன்னாள் முதல மைச்சரும் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி நடத்தி வைக்கிறார்.

இந்த திருமணத்திற்கான முகூர்த்தக்கால் அமைக்கும் பணி டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் காலை 10 மணியளவில் கழகப் பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கழக துணை பொதுச்செயலாளர் நத்தம் இரா. விசுவநாதன் ஆகியோர் முகூர்த்தக்கால் பந்தலை வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, இசக்கி சுப்பையா, ராஜலெட்சுமி, கழக அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், கழக அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, எஸ். டி.கே.ஜக்கையன், சின்னதுரை, சுதா பரமசிவம், மாவட்ட கழகச் செயலாளர்கள் எஸ்.பி.சண்முகநாதன், குட்டியப்பா எம்.எல்.ஏ., செந்தில்நாதன் எம்.எல்.ஏ, எம்.ஏ.முனியசாமி, ரவிச்சந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக மகளிர் இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியபுள்ளான், எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, தமிழரசன், மாநில ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், சதன் பிரபாகரன், வெற்றிவேல், சினிமா தயாரிப்பாளர் ஜி.என்.அன்புசெழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:

எம்.ஜி.ஆர். 106 வது பிறந்த நாளை முன்னிட்டும் ஜெயலலிதாவின் 75 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டும் கழக 51 வது பொன் விழா ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் கழக ஜெயலலிதா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 23 ம் தேதியில் 51 ஏழை எளிய மணமக்களின் திருமணம் நடைபெறுகிறது. எல்லோரும் சமம் என்பதன் அடிப்படையில் தனது மகள் திருமணத்தை ஆர்.பி.உதயகுமார் இதில் சேர்த்து நடத்துகிறார். இந்த திருமணத்தை கழக இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் நடத்தி வைக்கிறார்.