Take a fresh look at your lifestyle.

டில்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி: பாஜக தலைவர் ராஜினாமா

71

டில்லியில் ஒருங்கிணைந்த மாநகராட்சியின் 250 இடங்களுக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் ஜெயித்து அபார வெற்றி பெற்றது. பா.ஜ.க.வுக்கு 104 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அந்த வகையில் டில்லி மாநகராட்சி முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி வசம் சென்றுள்ளது. டில்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து டில்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா பதவி விலகினார். ஆதேஷ் குப்தாவின் ராஜினா மாவிற்கு ஒப்புதல் பாஜக தலைமை அளித்துள்ளது. மேலும் துணை தலைவராக இருந்த வீரேந்திர சச்தேவா இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.