Take a fresh look at your lifestyle.

டில்லியில் பிளஸ்2 மாணவி மீது ஆசிட் வீச்சு: 3 வாலிபர்கள் கைது

100

 

டெல்லியில் பிளஸ்2 மாணவி மீது ஆசிட் வீசிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி உத்தம் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் தனது சகோதரியுடன் சாலையில் நடந்து பள்ளிக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் மாஸ்க் அணிந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென அந்த மாணவி மீது ஆசிட் வீசினர். இதில் படுகாயம் அடைந்த மாணவி மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து ஆசிட் வீசியவர்களை கண்டுபிடித்தனர். இதில் சச்சின் அரோரா, அவரது நண்பர்கள் ஹர்சித் அகர்வால், வீரேந்திர சிங் ஆகிய 3 பேரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர். சச்சின் அரோராவும் ஆசிட் வீசப்பட்ட மாணவியும் அருகருகே வசித்து வந்ததால் நட்பாக பழகி வந்தனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் நட்பு முறிந்து விட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாணவி மீது ஆசிட் வீசியதாக சச்சின் போலீசாரிடம் கூறியுள்ளார். மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து, இதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.