உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் ஸ்பெயின் ஜெ ர்மனி அணிகளின் ஆட்டம் டிராவில் முடிந்தது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு ‘இ’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் – ஜெர்மனி அணிகள் சந்தித்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. பின்னர் பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது பாதியின் 62-வது வினாடியில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இந்த சூழலில் ஸ்பெயின் அணிக்கு பதிலடியாக ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கவில்லை. இதன்மூலம் ஆட்டம் 1- 1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.