Take a fresh look at your lifestyle.

டிஜிபி தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு ஆலோசனை கூட்டம்

DGP SYLENDRABABU MEETING WITH POLICE OFFICIALS FOR DRIVE AGINST DRUG

49

சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் போதை பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கஞ்சா விற்பனை, பதுக்கல் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்திப்ராய் ரத்தோர் மற்றும் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், தமிழகம் மற்றும் சென்னை சரக ஐஜிக்கள், டிஐஜிக்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.