டிஜிபி சைலேந்திரபாபுவை ஓய்வு பெற்ற காவலர் நலன் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அதில், ‘‘காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காவலர்கள் இறக்கும் பொழுது அவர்களின் சேவை யை அங்கீகரித்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்கள் வசித்து வந்த இடத்திற்கு உட்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் நேரில் சென்று அவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த உத்தரவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் சார்பில் அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளருமான குணசேகரன், பொதுச் செயலாளர் பாலன், பொருளாளர் தரணி, ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் மற்றும் ஓய்வு பெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் பகவதி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவை இன்று (22.2.2023) நேரில் சந்தித்து, ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் சார்பாக நன்றி தெரிவித்தார்கள்.