Take a fresh look at your lifestyle.

டிஜிபி சைலேந்திரபாபுவின் புத்தாண்டு அட்வைஸ்

106

புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க தலைமை அலுவலகங்களுக்கு புறப்படும் வழக் கத்தை காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் தவிர்க்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், ‘‘புத்தாண்டு தினத்தன்று காவல் அதிகாரிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்க தலைமை அலுவலகங்களுக்கு புறப்படும் வழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்தால் போதுமானது. புத்தாண்டு தினத்தன்று காவல் நிலையங்களிலும் மற்றும் அவரவர் அலுவலகங்களிலும் இருந்து, அன்றாட பணி களை மேற்கொள்ளுதல் அவசியமானது. அதோடு காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வா ளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் அவர்களுக்கு சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டிய வாராந்திர விடுப்பு, புத்தாண்டு தினத்தன்று கட்டாயம் வழங்கவும் அறிவுறுத்தப்படுகிறது. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’’. இவ்வாறு சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.