தமிழகம் முழுவதும் இன்று ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அண்ணா தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து வணங்கினார். அண்ணா தி.மு.க. கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி பிறந்த நாள் மலரை வெளியிட்டார். ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் 75 கிலோ கேக்கை எடப்பாடி வெட்டினார். மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். அன்னதானமும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.