சென்னை, செப். 15–
விருதுநகரில் சைபர்கிரைம் போலீசாரின் உதவியுடன் ரூ. 10 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த மோசடிகளை களைவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள எஸ்பி அலுவலகங்களில் சைபர்கிரைம் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு அது தொடர்பான புகார்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூ 10 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த குடிமகன் ஒருவருக்கு வங்கியில் இருந்து KYC update செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஒரு லிங்க் அனுப்பி அதன் மூலம் ரூபாய். 9,44,999/- மோசடி செய்யப்பட்டது. அந்த மோசடி தொடர்பாக அந்நபர் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். தமிழக சைபர் கிரைம் கூடுதல் டிஜிபி அமரேஷ் புஜாரி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன்படி ன்படி துரிதமாக செயல்பட்ட விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மோசடி செய்த நபரின் வங்கி கணக்கினை முடக்கி ரூபாய். 9,33,037 பணத்தை உடனடியாக மீட்டனர்.
அவசர உதவிக்கு செல்போன் செயலி மேலும் கீழ்க்கண்ட
https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi என்ற முகவரியில் சென்று காவல் உதவி என்ற செயலியை செல்போனில் டவுண் லோடு செய்து வைப்பதன் மூலம் அவசர உதவிக்கு காவல்துறையை நாடலாம் என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.