Take a fresh look at your lifestyle.

செவ்வாய்பேட்டையில் புதிய காவல் நிலையம்: ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் திறந்து வைத்தார்

139

நவீன வசதிகளுடன் 3 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்ட செவ்வாய்பேட்டை புதிய காவல் நிலையத்தை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார்.

ஆவடி காவல் ஆணையரகம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்டு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. திரு வள்ளூர் மாவட்ட எல்லையில் இருந்த செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையம் ஆவடி காவல் ஆணை யரக எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையம் திரு வூரில் ஒரு சிறிய ஆரம்ப சுகாதார கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இங்கு காவலர்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ள போதுமான இடவசதி இல்லாமல் தவித்து வந்தனர். கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் மக்கள் பயன் பாட்டிற்காக செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

அதன்படி செவ்வாய்ப்பேட்டை, பொன்னுதுரை தெரு, சிடிஎச் சாலையில் 3,000 சதுர அடி வாடகை கட்டடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார். காவல் நிலையத்திற்கு போதிய காவலர்கள் நியமிக்கப்பட்டனர். புதிய காவல் நிலையத்தில் 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் போதுமான உள்கட்டமைப்பு மற்றும் நல்ல குடீநீர் வசதி யுடன் ஆண்கள் பெண் களுக்கான தனி ஓய்வு அறைகள் இங்கு உள்ளன. மேலும் காவலர் களுக்கான குடி யிருப்புகள் மற்றும் புதிய .செவ்வாப்பேட்டை காவல் நிலைய சொந்தக் கட்ட டம் கட்டுவதற்கு போதுமான அரசு நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது என கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் கூறினார்.