Take a fresh look at your lifestyle.

செய்துங்கநல்லூரில் காவல் ரோந்துப் பணியின் போது சிக்கிய கஞ்சா

94

தூத்துக்குடியில் எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் போலீசார் நேற்று (06.04.2022) செய்துங்கநல்லூர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவை சேர்ந்த அங்கப்பன் மகன் முத்துபாண்டி (21) என்பதும், அவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் முத்துபாண்டியை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவையும் TN 76 A 6404 Hero Honda CD Dawn என்ற இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முத்துபாண்டி மீது ஏற்கனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு கூட்டுகொள்ளை வழக்கும், ஒரு கஞ்சா வழக்கும் என 2 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொள்ளை வழக்கும் என மொத்தம் 3 வழக்குகள் குறிப்பிடத்தக்கது.