Take a fresh look at your lifestyle.

செம்மஞ்சேரியில் 1100 போதை மாத்திரைகள் ஊசிகள் பறிமுதல்: 4 பேர் கும்பல் கைது

75

சென்னை செம்மஞ்சேரியில் ஆன்லைன் மூலம் 1,100 போதை மாத்திரைகளை வாங்கி அவற்றை விற்பதற்காக கடத்திச் சென்ற 4 ஆசாமிகளை தாம்பரம் காவல் ஆணையரக போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கஞ்சா மற்றும் போதை மருந்து விற்பனையை தடுக்கும் பொருட்டு தாம்பரம் மதுவிலக்கு உதவிக்கமிஷனர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனை யில் ஈடுபட்டனர். செம்மஞ்சேரி தனியார் கல்லூரி எதிரில் இரு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 நபர்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 1,100 நைட்ராவேட் போதை மாத்திரைகள் மற்றும் 30 ஊசிகள், சிரஞ்சிகளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து அவற்றை கடத்தி வந்த சோழிங்கநல்லூர் அரிஹரசுதன் (22), வினோத் (25), சஞ்சய் (20), அரவிந்த் (25) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டில்லியில் இருந்து போதை மாத்திரை வரும் என பரபரப்பு தகவல்களை அவர்கள் வெளியிட்டனர். அதனையடுத்து அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.