Take a fresh look at your lifestyle.

செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து பிளஸ்2 மாணவன் தற்கொலை: தீயணைப்புப் படையினர் உடலை மீட்டனர்

plus2 boy suicided in somamanglam

59

சென்னையை அடுத்த சோமமங்கலத்தில் பிளஸ்2 தேர்வில் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் மனம் உடைந்த சிறுவன் செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த சோமமங்கலம், புதுப்பேர் கிராமம், தனலட்சுமி நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் விக்னேஷ் (17). 12ம் வகுப்பு பரீட்சையில் தேர்ச்சி பெறாததால் மீண்டும் தேர்வு எழுதியுள்ளார். நேற்று தேர்வு ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் அதிலும் விக்னேஷ் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவரது தந்தை விக்னேஷை திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த விக்னேஷ் மனம் உடைந்து இன்று மதியம் 2 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்தார். இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் சிறுவன் விக்னேஷ் ஏரியில் மூழ்கி உயிரிழந்தான். ஏரியில் மேல் மிதந்த அவனது உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சோமமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.