சென்னை வேப்பேரி ஈவேரா சாலை தாசப்பிரகாஷ் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்
traffick route changed in vepery
ஈ.வே.ரா சாலையில் உள்ள தாசபிரகாஷ் சந்திப்பில் காலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டியும், வாகன ஓட்டிகளின் நன்மை கருதியும் 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரையில், தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈவேரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே 22.05.2022 அன்று முதல் காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
1) காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரையில் தாசபிரகாஷ் சந்திப்பை இணைக்கும் ராஜா அண்ணாமலை சாலை மற்றும் அழகப்பா சாலையில் ஈ.வே.ரா சாலை சந்திப்பு முதல் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
2) ஈவேரா சாலை மற்றும் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து டாக்டர் அழகப்பா சாலை வழியாக செல்ல இயலாது.
3) புரசைவாக்கத்திலிருந்து கங்காதீஸ்வரர் கோயில் தெரு வழியாக வரும் வாகனங்கள் தாசபிரகாஷ் சந்திப்பை நோக்கி ராஜா அண்ணாமலை சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
4) அத்தகைய வாகனங்கள் கங்காதீஸ்வரர் கோயில் தெரு மற்றும் ராஜா அண்ணாமலை சாலை சந்திப்பில் இடது புறமாக திரும்பி டாக்டர் அழகப்பா சாலை, வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் வலது புறமாக திரும்பி டாக்டர் நாயர் பாயின்ட் சந்திப்பில் நேராகவோ, வலது மற்றும் இடது புறமாக திரும்பி செல்லலாம்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .