Take a fresh look at your lifestyle.

சென்னை வண்ணாரப்பேட்டை கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

71

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்டான்லி நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் (எ) ஸ்டான்லி நகர் சண்முகம், 23. இவர் ஆர்.கே. நகர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை வழக்கு உட்பட 9 வழக்குகள் உள்ளது.

சண்முகம் 28.02.2023ம் தேதி அதிகாலை 1.15 மணியளவில் குடிபோதையில் வண்ணாரப்பேட்டை, ஹண்டிங் மைதானம் அருகே சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நபர்களிடம் வீண் தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மேற்படி நபர்கள் சண்முகம் (எ) ஸ்டான்லி நகர் சண்முகத்தை கற்களால் தாக்கியுள்ளனர். மேலும் தாக்குதலில் இரத்த காயமடைந்து மயங்கி விழுந்த சண்முகம் (எ) ஸ்டான்லி நகர் சண்முகம் மீது பெரிய கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் சண்முகம் (எ) ஸ்டான்லி நகர் சண்முகம் சம்பவயிடத்திலே இறந்துவிட்டார்.

 

இது குறித்து கொலையுண்ட சண்முகம் (எ) ஸ்டான்லி நகர் சண்முகத்தின் மனைவி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் (எ) ஆளா, 23, இளங்கோவன்,  25,

கரிமுல்லா கரீம், 19, ஆனந்தகுமார் (எ) ஆனந்த், 19, அசோக்குமார் (எ) அசோக், 19, ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். மேலும் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 இளஞ்சிறார்களும் பிடிப்பட்டனர். மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட சக்திவேல் (எ) ஆளா மீது ஏற்கனவே 3 வழக்குகளும், இளங்கோவன் மீது 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் இன்று (28.02.2023) நீதிமன்றத்திலும், 2 சிறுவர்கள் இளஞ்சிறார் நீதிமன்றத்திலும் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.