சென்னை வணிக வளாக பாரில் மது அருந்திய இளைஞர் பலி: அனுமதியின்றி நடத்திய 3 பேர் கைது
youngster died in anna nagar private bar
சென்னை அண்ணாநகரில் தனியார் ‘மால்’ மதுபாரில் நடந்த நிகழ்ச்சியில் மது அருந்திய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி பார் நடத்தியதாக பார் நிர்வாகிகள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். 812 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் போலீசார் தரப்பில் கூறியதாவது, ‘‘திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள VR mall ல் உள்ள நான்காம் தளத்தில் முறையான அனுமதியின்றி BookMyShow என்ற APP மூலமாக 1500 ரூபாய் வசூல் செய்து great Indian gathering என்ற நிகழ்ச்சியை பிரேசிலை சேர்ந்த mandra gora என்ற உலகப் புகழ்பெற்ற நபரால் DJ என்ற நிகழ்ச்சி நடந்து வந்துள்ளது. இதில் கலந்து கொள்ள நேற்று மாலை 6 மணியளவில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 900 இளம் பெண்கள், வாலிபர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நான்காவது மாடியில் மது விருந்து அளிக்கப்பட்டது.
இதில் 21 வயதுக்கும் குறைவான நபர்களுக்கும் மது வழங்கப்பட்டுள்ளது. அதற்காக காவல்துறையில் எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மது அருந்திய நபர் இறந்தது தொடர்பாக தகவல் வந்ததும் இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணைக்கமிஷனர் சிவப்பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 4வது மாடியில் இருந்த அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். 3வது மாடியில் இயங்கும் ‘மங்கி பார்’ என்ற பெயரில் பார் லைசென்ஸ் இல்லாமல் இயங்கி வருவது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
அது தொடர்பாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அதனையடுத்து அந்த பாரில் இருந்து சுமார் 844 மதுபாட்டில்களில் 412 லிட்டர் மதுவை பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த மதுபாரின் நிர்வாகிகள் விக்னேஷ், சின்னதுரை, மார்க் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.