Take a fresh look at your lifestyle.

சென்னை மேற்கு காவல் மண்டலத்தில் போலீஸ் பாய்ஸ் கிளப் சார்பில் நடந்த மெகா மருத்துவ முகாம்

319

சென்னை நகர மேற்கு மண்டலத்தில் காவல்துறை சார்பில் பாய்ஸ் கிளப்பில் உறுப்பினர்களாக உள்ள சிறார், சிறுமிகளுக்கான மெகா மருத்துவ முகாமை இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி துவங்கி வைத்தார்.

சென்னை நகரில் உள்ள பாய்ஸ் கிளப் அமைப்புக்கள் சீர்படுத்தப்பட்டு தற்போது புத்துணர்வு அளிக்கும் வகையில் கமிஷனர் சங்கர் ஜிவால் புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறார். குழந்தைகள் குற்றத்தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை களைவதற்கு சென்னை நகர மேற்கு மண்டல இணைக்கமிஷனர்
ராஜேஸ்வரி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை புளியந்தோப்பு, அண்ணாநகர் காவல் மாவட்டங்களில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக இணைக்கமிஷனர் ராஜேஷ்வரி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சென்னை நகர மேற்கு மண்டலத்தில் பாய்ஸ் கிளப் சிறார், சிறுமியர்களுக்கான மருத்துவ முகாம் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கியுள்ளன. இந்த முகாமில் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த சிறுவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் உடற்பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி மேற்பார்வையில், அண்ணாநகர் துணைக்கமிஷனர் சிவப்பிரசாத், புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் சிறார், சிறுமியர்களுக்கு கண் பரிசோதனையும் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாம் பற்றி இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி கூறியதாவது, ‘‘போலீஸ் பாய்ஸ் கிளப் சிறார், சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இந்த மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் எம்கேபி நகர் கிளப், அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு பாய்ஸ் கிளப் ஆகியவற்றில் இந்த நிகழ்ச்சி முதற்கட்டமாக நடக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் பாய்ஸ் கிளப்பைச் சேர்ந்த சுமார் 400 பேர் பயனடைந்துள்ளனர். மருத்துவ முகாமில் நலம், அப்பல்லோ மற்றும் பிவெல் மருத்துவமனைகள் உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். இந்த மருத்துவ முகாம் பாய்ஸ் கிளப்புக்களில் தொடர்ந்து நடைபெறும்’’ இவ்வாறு தெரிவித்தார்.