Take a fresh look at your lifestyle.

சென்னை மெரினா – பெசன்ட் நகர் இடையே ரோப் கார்: மத்திய அரசு ஆய்வு

81

சென்னை மெரினா பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 10 இடங்களில் ரோப் கார் சேவை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிகபட்சமாக மகாரஷ்டிராவில் 5 கி.மீ. வரையும், இரண்டாவதாக தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை யிலிருந்து பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை வரை 4.6 கி.மீ. தொலைவுக்கு ரோப் கார் சேவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோப்கார் சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஆய்வு நடத்த தொடங்கியுள்ளது.
புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகளும், சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான ஆய்வுகளும் மேற்கொண்டு ரோப் கார் சேவை அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.