Take a fresh look at your lifestyle.

சென்னை, மாதவரம் பகுதியில் சைக்கிள்களை திருடி விற்ற இருவர் கைது 8 சைக்கிள்கள் பறிமுதல்

69

சென்னை, கொளத்தூர், திருமலைநகர் 2வது தெருவில் வசித்து வரும் செல்வம் (41). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 23.03.2022 அன்று காலை அவரது சைக்கிளில் சென்று மூலக்கடை பாலம் கீழ் பகுதியில் அவரது சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.

இரவு சுமார் 7 மணியளவில் வந்து பார்த்தபோது, அவரது சைக்கிள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து செல்வம் மாதவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதனையடுத்து சைக்கிளை திருடிச் சென்ற சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த சங்கர் (40) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் சங்கர் மாதவரம் பகுதியில் செல்வம் சைக்கிள் உட்பட சுமார் 8 சைக்கிள்களை திருடி பால்ராஜ் என்பவரிடம் விற்று பணம் பெற்றது தெரியவந்தது. அதன்பேரில், திருடிய சைக்கிள்களை விலைக்கு வாங்கிய செங்குன்றம், மொன்டியம்மன் நகரைச் சேர்ந்த பால்ராஜ் (47) என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து புகார்தாரரின் சைக்கிள் உட்பட 8 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் சங்கர் மீது ஏற்கனவே சைக்கிள்கள் திருடியது தொடர்பாக பூக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சங்கர், பால்ராஜ் இருவரும் நேற்று (25.03.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.