Take a fresh look at your lifestyle.

சென்னை மற்றும் தேனியில் 26 கிலோ கஞ்சா, 1.600 கிலோ மெத்தம்பெடமைன் பறிமுதல்: என்ஐபி போலீசார் நடவடிக்கை

GANJA AND METHEMPHETAMINE SEAZED BY CHENNAI NIB POLICE

92

சென்னை மற்றும் தேனியில் போதைப் பொருள் கடத்தல் ஆசாமிகளிடம் இருந்து 26 கிலோ கஞ்சா, 1.6 கிலோ மெத்தம்பெடமைன் ஆகியவற்றை போதைப்பொருள் தடுப்பு நுண்ணிவுப்பிரிவு  போலீசார்  பறிமுதல் செய்தனர்.

சென்னை திருவான்மியூர் பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் மேற்பார்வையில், சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதனையடுத்து சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அழகர்சாமி (வயது 29) என்பவரை 600 கிராம் மெத்தம்பெடமைன் போதைப்பொருளுடன் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வியாசர்பாடியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் அழகர்சாமிக்கு மெத்தம்பெடமைன் சப்ளை செய்தது தெரியவந்தது. மேலும் அஜித்குமாரிடம் இருந்து மேலும் 1 கிலோ மெத்தம்பெடமைனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை அஜித்குமார் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்து விற்பனை செய்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் திண்டுக்கல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் டிஎஸ்பி புகழேந்தி, இன்ஸ்பெக்டர், தேனி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது போடி பஸ் நிலையம் அருகில் வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை நடத்தினர். அப்போத அதற்குள் 26 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அதனையடுத்து வேனில் அதனை கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் (வயது 52), கருப்பையா (33) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் 1.600 கிலோ மெத்தம்பெடமைன் மற்றும் தேனியில் 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்டை போலீசாரை கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார். மேலும் போதைப்பொருள் கடத்தல் குறித்த தகவல்களை ஹெல்ப்லைன் எண் 10581 மற்றும் 94984 10581 spnibcid@gmail.com ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.