சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நட்சத்திர காவல் விருது
CCB inspector kalarani rewarded by commissioner of police
சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல்
ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு
சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், தலைமையிட கூடுதல் காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையிலான குழு ஒவ்வொரு மாதமும் தீவிரமாக ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாகவும் மெச்சத்தக்க வகையிலும் பணிசெய்யும் காவல் அதிகாரி அல்லது ஆளிநரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியினை மதிப்பிட்டு “மாதத்தின் நட்சத்திர காவல் விருது பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் நட்சத்திர காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் காவல் அலுவலருக்கு ரூ. 5 ஆயிரம் பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல்திறன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஆராய்ந்து, கடந்த 2022ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் சிறப்பாகவும், மெச்சத் தக்க வகையிலும் பணியாற்றியமைக்காக பட்டியல் தயார் செய்தனர். அந்த வகையில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு, வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கலாராணி என்பவரை “ஏப்ரல் மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்கு” தேர்வு செய்தனர்.
கமிஷனர் சங்கர்ஜிவால் இன்ஸ்பெக்டர் கலாராணியை நேற்று (30.05.2022) நேரில் அழைத்து ஏப்ரல் மாதத்தின் நட்சத்திர காவல் விருதுக்குரிய ரூ. 5 ஆயிரம் பண வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
மத்திய மற்றும் மாநில அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நேர்முகத் தேர்வு
நடத்தி போலியான பணி நியமன ஆணைகள் வழங்கிய 2 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 18
நபர்களை கைது செய்து, 35 சவரன் தங்க நகைகள், ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொத்து
ஆவணங்கள் மற்றும் 100 போலி பணி நியமன ஆணைகளை கைப்பற்றி
மத்தியக் குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் கலாராணி சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
மேலும் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களில் வருகிற 31.05.2022 மற்றும் 1.6.2022 ஆகிய தேதிகளில் பிறந்த நாள் கொண்டாடும் 41 காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நேரில் அழைத்து வாழ்த்து ச் செய்தியுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து அட்டைகளை வழங்கி, பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியின் போது கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) லோகநாதன் உடனிருந்தார்.