சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணைக்கமிஷனர் தலைமையில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் இன்று (30.01.2022) காலை 11 மணியளவில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக தலைமையி இணைக்கமிஷனர் சாமுண்டீஸ்வரி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.