Take a fresh look at your lifestyle.

சென்னை போலீசின் ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் முழுமையடைந்தது: ஒத்துழைப்பு தந்த பொதுமக்கள்

chennai Traffic police No Honking awareness week completed successfully

95

கடந்த 27.06.2022 முதல் 03.07.2022 வரை ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு வாரமாக (No Honking Awareness Week) கடைபிடிக்க வலியுறுத்தி, 27.06.2022 அன்று கமிஷனர் சங்கர்ஜிவால் விழிப்புணர்வை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒலி மாசு விழிப்புணர்வு வாரத்தில், பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பரவலான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்றன. தோழன் மற்றும் யங் இந்தியா ஆகிய அமைப்பு சார இயக்கங்கள் இந்த வெற்றிகரமான பிரச்சாரத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து செயல்பட்டனர்.

சென்னை நகரின் 154 சந்திப்புகளில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் 7 நாட்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 15,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். 7 நாட்களில் 2.3 லட்சம் சென்னைவாசிகளால் நோ ஹான்கிங் எதிர்ப்பு இயக்கத்தை ஆதரித்து உறுதி மொழி கையெழுத்து பெறப்பட்டது.

மேலும் தமிழக முதலமைச்சர் அலுவலகமும் ட்விட்டர் மூலமாக பிரச்சாரத்தை ஆதரித்து மின்னணு உறுதிமொழி எடுக்க வலியுறுத்தியது. மின்னணு உறுதிமொழி எடுத்த அனைவருக்கும் டிஜிட்டல் சான்றிதழ்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் சமூக ஊடகங்கள் மூலமாகவும், அஞ்சல் மூலமாகவும் பதிவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. நகரின் ஏறக்குறைய 200 சந்திப்புகளில் செல்பி கட்அவுட்கள், பேனர்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. சென்னை முழுவதும் 115 VMS போர்டுகளில் ஹான்கிங் செய்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. மொபைல் LED பிரச்சார வேன் 7 நாட்களில் நகரின் 30 முக்கிய இடங்களுக்குச் சென்று நோ-ஹான்கிங் செய்தியை பரப்பியது.

இந்த பிரச்சாரத்தில் சென்னையை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்றனர். அதிக எண்ணிக்கையிலான வாகன ஓட்டிகள் தானாக முன்வந்து சிக்னல்களில் ஹான்கிங் உறுதிமொழி எடுத்தனர். பிரபலமானவர்களின் பிரச்சாரமும் மற்றும் சமூக வலைதளங்களின் ஆதரவும் நம்முடைய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 281 வழக்குகளில், வாகனங்களில் இருந்து ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன், மேலும் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யங் இந்தியன்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், நகரின் பல்வேறு இடங்களில் டெசிபல் அளவிலான கணக்கெடுப்பை நடத்தி, சராசரி டெசிபல் விகிதத்தை 84.5 டெசிபல்களாக பதிவு செய்துள்ளது. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பள்ளிகளில் இருந்து 240 மாணவர்கள் கலந்து கொண்ட ஓவியப் போட்டி டிராப்பிக் வார்டன்கள் அமைப்பு மூலமாக நடைப்பெற்றது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 05.07.2022 அன்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அவர்களால் பரிசு வழங்கப்படவுள்ளது. ஒலிப்பானிற்கு எதிரான விழிப்புணர்வு வாரத்தை சிறப்பான முறையில் வழி நடத்திய சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு வெற்றிகரமாக அமைந்தது. மேலும், இந்த ஒலி மாசு எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் ஒலிமாசு இல்லாத சென்னையாக மாற்றுவதற்கான முதல் படியாக அமைந்தது வரவேற்கத்தக்கது.