Take a fresh look at your lifestyle.

சென்னை போலீசார் தயாரித்துள்ள சைபர்கிரம் விழிப்புணர்வு புத்தகம்

79

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முத்துவும் 30 திருடர்களும் என்ற பெயரில் சைபர் விழிப்புணர்வு மின்னஞ்சல் புத்தகத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இந்தப் புத்தகம் மாதம் தோறும் புதுப்பிக்கப்பட்டு, இணையத்தில் வெளியிடப்படுகிறது.

அது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் கூறுகையில், ‘‘சென்னை பெருநகர காவல் துறையின் சார்பாக சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தில் வெளியிடப்பட்ட “முத்துவும் 30 திருடர்களும்” என்ற மின்நூல் மாதந்தோறும் புதுப்பிக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அது தொடர்பான புதிய குற்ற செயல்வகை முறையானது கதை வடிவில் தயாரிக்கப்பட்டு QR கோடானது ஒவ்வொரு மாதமும் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த மாதத்தின் அப்டேட் மின் நூலானது, ”முத்து டேட்டிங் போனாரா?” என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் QR கோடினை ஸ்கேன் செய்து நடைமுறையில் உள்ள, கிரிமினல்கள் உபயோகிக்கும் சைபர் கிரைம் செயல் முறைகள் குறித்து அறிந்துகொண்டு சைபர் கிரைம் விழிப்புணர்வு பெற்ற குடிமக்களாக விளங்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.