Take a fresh look at your lifestyle.

சென்னை பெருநகர காவல்துறையின் காவல் கரங்கள் திட்டத்திற்கு ‘ஸ்கோச் தங்க விருது’

54

சென்னை பெருநகர காவல் துறையில் ‘காவல் கரங்கள்’ திட்டம் 2022ம் ஆண்டிற்கான ‘ஸ்கோச் தங்க விருது’ வென்று சாதனை படைத்துள்ளது.

சென்னை நகர காவல்துறையில் இயங்கி வரும் செயல் திட்டங்களில் ஒன்றான ‘காவல் கரங்கள்’  என்ற திட்டம் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் அமலாக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை யோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டும், உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்படுவதும் இந்த காவல் கரங்கள் திட்டத்தின் நோக்க மாகும்.

மேலும் ‘ஆனந்தம்’, சிற்பி, மகிழ்ச்சி மற்றும் காவலர் விடுப்பு செயலி ஆகிய திட்டங் கள் மூலம் மாணவர்கள், பெண் காவலர்கள் உள்ளிட்டோரை காக்கும் வகையிலும் உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் சென்னை நகர காவல்துறை மூலம் முன் மொழியப் பட்டு ஸ்கோச் தங்க விருதிற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருந்தது. இந்த ஸ்கோச் விருது ஆய்வு ஆரம்ப நிலை, அரை இறுதி நிலை, இறுதி நிலை என 3 கட்டமாக நடத்தப்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்டிருந்த நிபுணர்கள் குழுக்கள் அனைத்து செயல் திட்டங்களையும் மதிப்பீடு செய்தார்கள். அவர்களுக்காக அனைத்து செயல் திட்டங்களும் சென்னை பெருநகர காவல் சார்பாக விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

மேலும் பொதுமக்கள் சார்பாக இணையவழி முறையில் ஓட்டளிக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால் பொதுமக்களும் ஓட்டளித்தனர். இதில் கடந்த மாதம் 23ம் தேதியன்று நடை பெற்ற அரை இறுதி சுற்றுக்கு காவல் கரங்கள், சிற்பி மற்றும் மகிழ்ச்சி திட்டங்கள் தகுதி பெற்றன. நேற்று முன்தினம் நடந்த இறுதிச் சுற்றில் இந்த 3 திட்டங்களுக்கும் ORDER OF MERIT- 2022 AWARD கிடைக்கப் பெற்றது. மேலும் இறுதியாக அனைத்து தேர்வு நிலையிலும் “காவல் கரங்கள்” தகுதி பெற்று POLICE & SAFETY -2022-க்கான ஸ்காச் தங்க விருது – 2022 பெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.