சென்னை வேப்பேரியில் காவல் ஆணையரகத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட புதிய போக்கு வரத்து காவல் மண்டல அலுவலகத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து வைத்தார்.
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் மண்டல அலுவலகம், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தின் 5 வது தளத்தில் இயங்கி வருகிறது, இதில் 72 அமைச்சு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். முன்னதாக இவ்வலுவலகம் போதிய இடவசதியின்றி இருந்து வந்தது. கமிஷனர் சங்கர்ஜிவால், கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் ஆகியோ ரின் முயற்சியால், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் மற்றும் அவர் களின் தளவாடப் பிரிவான ஹூண்டாய் குளோவிஸ் தங்களின் நிறுவன சமூகப் பொறுப்பு நிதியின்(CSRF) கீழ் மொத்தம் ரூ. 50.74 லட்சம் செலவில், போக்குவரத்து மண்டல அலுவலக த்தை தற்போதுள்ள இடத்தில் 72 கார்ப்பரேட் பாணி பணிச்சூழலியல் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு போக்குவரத்து அலுவலக ஊழியர்களுக்கும் 72 ரோலிங் நாற்காலிகள், 72 லாக்கர்கள் மற்றும் 27 ஸ்டீல் பீரோக்கள் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக, முழு போக்குவரத்து அலுவலகத்தையும் உள்ளடக்கியவாறு ஆறு 2 டன் ஏர் கண்டிஷனர்களும் பொருதப்பட்டுள்ளது. மேலும், அலுவலகம் முழுவதும் புதியதாக வர்ணம் பூசியும் தேவையான பிராட்பேண்ட், மின் கேபிள் இணைப்புகள் ஆகியவற்றையும் வழங்கப் பட்டுள்ளது. கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று (07.12.2022) காலை, புதுப்பிக்கப்பட்ட போக்கு வரத்து காவல் மண்டல அலுவலகத்தினை, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சராத்கர், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் சரவணன், AVP Finance மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த சென்னை பெருநகர போக்கு வரத்து காவல்துறையில் பணிபுரியும் 3000-க்கும் மேற்பட்டவர்களின் முதுகெலும்பாக இருக்கும் போக்குவரத்து அலுவலகத்தின் நீண்ட கால் அடிப்படையிலான மேம்படுத்தப்பட்ட மற்றும் வசதியான பணிச்சூழல்கள் அவ்வலுவலக பணியாளர்களை ஊக்குவித்தும் அவர்களின் செயல்திறனை அதிகரிப்பதிலும் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்படுகிறது.