Take a fresh look at your lifestyle.

சென்னை நகரில் ‘வாக்கத்தான்’ விழிப்புணர்வு நடைபயணம்: கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்

131

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் வாக்கத்தான் விழிப்புணர்வு நடைபயணத்தை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்.

 

இந்திய அரசு புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட “ திரைகடல் ஓடியும் திரவியம் தேடு பாதுகாப்பாக” விழிப்புணர்வு நடைபயணம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 7.30 மணியளவில் சென்னை, சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை போலீஸ் பூத் அருகே இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் 75வது ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, இந்திய அரசு புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு பாதுகாப்பாக, விழிப்புணர்வு நடை பயணத்தை (Walkathon) சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கொடியசைத்து துவக்கி வைத்து நடை பயணத்தில் கலந்து கொண்டார். இந்த நடை பயணம் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் நடை பயணம் துவங்கிய இடமான எலியட்ஸ் கடற்கரை போலீஸ் பூத் அருகே வந்து முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு அமைச்சகம், சென்னை குடிபெயர்வோர் பாதுகாவலர் வெங்கடாச்சலம், வெளியுறவு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கு பணியாளர்களை அனுப்பும் முகவர்கள் சுமார் 250 நபர்கள் கலந்து கொண்டனர்.