Take a fresh look at your lifestyle.

சென்னை நகரில் குடிபோதையில் வாகன ஓட்டிய 2,561 பேரிடம் ரூ. 2.61 கோடி அபராதம் வசூல்

72

சென்னை நகரில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2,561 பேரிடம் போக்குவரத்துப் போலீசார் ரூ. 2.61 கோடி அபராதம் வசூலித்து சாதனை படைத்துள்ளனர்.

சென்னை நகரில் சாலை விபத்துக்களை குறைக்கும் வண்ணம் போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் போக்குவரத்து போலீசார் தற்போது அதிரடி வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகி ன்றனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் பரிசோதனை செய்து அபராதம் விதிக்கின்றனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதத் தொகை ரூ. 10,000 அதிகமாக இருப்பதால் பலர் அபராதம் செலுத்தாமல் தப்பி விடுகின்றனர்.

அது தொடர்பாக நீதிமன்ற மெய்நிகர் பிரிவிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் வாகன ஓட்டிகள் அபாரதம் செலுத்துவதில் அலட்சியம் செய்கின்றனர். இதனால் சென்னை நகர போக்குவரத்து காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட 7,902 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்தன. எனவே இதுபோன்ற விதி மீறுபவர்களுக்கு நிலு வையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை நகரில் 10 இடங்களில் கால் சென்டர்கள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவித்து, கடந்த 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதில் 620 பேர் ஆஜராகி நிலுவை வழக்குகளில் அபராத தொகை யை இணையதளம் மூலம் செலுத்தியுள்ளனர். இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் 10 அழைப்பு மையங்களில் 893 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ. 92 லட்சத்து 23 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் அழைப்பு மையங் களின் இதே போன்ற நடவடிக்கைகளால் 1,628 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ. 1 கோடியே 68 லட்சத்து 98 ஆயிரத்து 500- அபராதம் தொகை செலுத்தப்பட்டன. அந்த வகையில் கடந்த 3 வாரங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 2,521 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ. 2 கோடியே 61 லட்சத்து 21 ஆயிரத்து 500- அபராமாக வசூலிக்கப் பட்டுள்ளது. என சென்னை நகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தொடர் நடவடிக்கையின் மூலம் நிலுவையில் உள்ள குடிபோதை வழக்குகளை தீர்வு காண்பதற்காக போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக செயல்படுபவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை நகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாக னம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித் துள்ளது. ஏற்கனவே இதுபோன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தா தவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 340 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட செயல்பாட்டில் உள்ளன.