Take a fresh look at your lifestyle.

சென்னை நகரில் ஒலி மற்றும் மாசு விழிப்புணர்வு வாரம்: போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் துவங்கி வைத்தார்

shankar jiwal IPS conducted sound polution awareness programme in chennai

81

சென்னை நகரில் ஒலி மற்றும் மாசு விழிப்புணர்வு வாரத்தை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் துவக்கி வைத்தார்.

இன்றைய சூழ்நிலையில் ஒலி மாசுபாடு என்பது உலகில் ஒரு நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களையும் பாதிக்கும் கடுமையான விஷயம் ஆகும். ஆரோக்கியமான சத்தம் பகலில் 55 டெசிபல்களையும் இரவில் 40 டெசிபலையும் தாண்டக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஒலி மாசுபாட்டின் மிகவும் பொதுவான ஆதாரம் மோட்டார் வாகனத்தின் ஹாரன் ஆகும். ஒலி எழுப்பும் வழக்குகள் கடத்தும் மற்றும் உணர்திறன், இது எரிச்சல் மற்றும் ஆக்கிரமிப்பு, உயர் பதற்றம், அதிக மன அழுத்தம், தூக்கமின்மை, இதய நோய், மனநோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.

இதனால் ஒலி சத்தம் எழுப்பாமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பெருநகர சென்னை போக்குவரத்துக் காவலர்கள் 27.06.2022 முதல் 03.07.2022 வரை ஒலி எழுப்பாமை விழிப்புணர்வு வாரத்தைக் கடை பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று காலை 11 மணியளவில் சென்னை அசோக் நகர், அசோக் பில்லர் அருகில் ஒலி மாசு விழிப்புணர்வு வாரத்தை (No Honking awareness week) துவக்கி வைத்து, வாகனங்களில் தேவையற்ற இடங்களில் ஹாரன்கள் ஒலிப்பதால் ஏற்படும் ஒலி மாசு குறித்த போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நண்பகல் 12.15 மணியளவில், வேப்பேரி காவல் ஆணையரகம் அருகில், ஈ.வெ.ரா.சாலை – ஈ.வி.கே.சம்பத் சாலை சந்திப்பிலுள்ள சிக்னலில், போக்குவரத்து பிரச்சார வாகனத்தின் (Traffic Propoganda Vehicle) இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அங்கு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.