Take a fresh look at your lifestyle.

சென்னை, திருவல்லிக்கேணியில் லோன் மோசடியில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது

78

சென்னை, திருவல்லிக்கேணியில் லோன் வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் உட்பட 4 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, சேப்பாக்கம், அருணாச்சலம் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி (31). இவரை சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், ரூ. 5 லட்சம் லோன் தருவதாகவும் கூறியுள்ளார். மேலும் லோன் பெறு வதற்கு இன்சூரன்ஸ் பணம் ரூ. 31 ஆயிரத்து 500- செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனை உண்மையென நம்பிய லட்சுமி Google Pay மூலம் அந்த நபருக்கு பணம் ரூ.31,500- செலுத்தியுள்ளார். ஆனால் பேசியபடி லோன் வாங்கி தராமலும் பணத்தை திரும்ப தராமலும் லட்சுமியை ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து லட்சுமி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனையடுத்து லட்சுமியிடம் லோன் மோசடியில் ஈடுபட்ட சென்னை கேகே நகரைச் சேர்ந்த அரவிந்த் (22), பழவந்தாங்கல் பால்ஜோசப் (27), அயனாவரம் தெரசா -(22), எண்ணூர் வினிதா (-21) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட 4 நபர்களும் தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள் ளனர். அப்போது லட்சுமியை தொடர்பு கொண்டு எந்தவொரு சிரமமும் இல்லாமல் ரூ. 5 லட்சம் லோன் வாங்கி தருவதாகவும் அவ்வாறு லோன் வாங்குவதற்கு இன்சூரன்ஸ் கட்ட வேண்டும் என்று கூறி பணத்தை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. விசாரணை க்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.