Take a fresh look at your lifestyle.

சென்னை தரமணியில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்

103

சென்னை தரமணி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஆந்திராவைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை, தரமணி போலீசார் எஸ்ஆர்பி டூல்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக பையுடன் பேருந்திலிருந்து இறங்கிய நபரிடம் விசாரணை செய்த போது, அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் விற்பனைக்காக கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஆந்திரா, கோதாவரியைச் சேர்ந்த கண்டசாலா திருமத்துல்லா (26) என்பது தெரியவந்தது. அவரிடருந்து 13 கிலோ 750 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட கண்டசாலா திருமத்துல்லா ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர், நேற்று (19.11.2022) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.