சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
traffick route changed in chennai chetpat area
சென்னை சேத்துப்பட்டு, மெக்கானிக்கல் சாலை சந்திப்பில் மாலை நெரிசல் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டியும், வாகன ஓட்டிகளின் நன்மை கருதியும், 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் மாலை 18.00 மணி முதல் 20.00 மணி வரையில், ஹாரிங்டன் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் நேராக மற்றும் வலது புறமாக திரும்புவதற்கு தடை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே 22.05.2022 அன்று முதல் மாலை 18.00 மணி முதல் 20.00 மணி வரையில் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது
1. மாலை 8 மணி முதல் 8 மணி வரையில், ஹாரிங்டன் சாலையில் சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பு வழியாக நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்பர்டாங்க் சாலை செல்லும் வாகனங்கள், சேத்துப்பட்டு சிக்னல் சந்திப்பில் நேராக மற்றும் வலது புறம் திரும்ப அனுமதி இல்லை.
2. அத்தகைய வாகனங்கள் சேத்துப்பட்டு சந்திப்பில் இடது புறமாக திரும்பி மெக்கானிக்கல் சாலை, டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் கீழ் பகுதி சாலை வழியாக சென்று மறுபடியும் வலது புறம் திரும்பி டாக்டர் குருசாமி மேம்பாலம் சர்வீஸ் சாலை மற்றும் மெக்கனிக்கல் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்பிற்கு செல்லலாம்.
3. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கருத்து மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றது.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.