Take a fresh look at your lifestyle.

சென்னை, செம்பியத்தில் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்:

139

சென்னை செம்பியத்தில் உள்ள பள்ளியில் மேற்கு மண்டல இணை ஆணையாளர் தலைமையில் பெண்கள் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் திருமண தடை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சென்னை நகரில் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர மேற்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேஸ்வரி தலைமையில், சென்னை பெருநகர காவல் சார்பில் புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ஈஸ்வரன் உதவி ஆணையாளர், ஆண் மற்றும் பெண் காவல் ஆய்வாளர்கள் இன்று (30.03.2022) காலை, செம்பியம், மாதவரம் நெடுஞ் சாலையிலுள்ள அரசு பெண்கள் பள்ளியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியல், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்தும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்தும், குழந்தை திருமணத் தடை சட்டம், போக்சோ சட்டம் குறித்தும், அவசர உதவிக்கு காவல் உதவி எண்,100, பெண்கள் உதவி மைய எண்.1091, காவலன் SOS செயலி குறித்தும் காவல் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். செம்பியம் சரக உதவி ஆணையாளர் செம்பேடு பாபு, செம்பியம் சரக காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.