சென்னை, கோயம்பேடு பகுதியில் கூலி தொழிலாளியை கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் 5 நபர்கள் கைது. 1 இளஞ்சிறார் பிடிபட்டார். 1 செல்போன் ஆகியவற்றை பேோலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை, திருவேற்காடு, ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சுகுமார் (42). நேற்று மாலை 3.30 மணியளவில் குடிபோதையில் கோயம்பேடு, 100 அடி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பெண் உட்பட 7 நபர்கள் மேற்படி சுகுமாரை வழிமறித்து கத்தியால் தாக்கி அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த சுகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார். இணைக்கமிஷனர் ராஜேஷ்வரி உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதனையடுத்து சுகுமாரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நீலகிரி கோத்தகிரியைச் சேர்ந்த கனி (எ) சேட்டா, 29, ஷாஜகான், 28, கடலூர் பாலாஜி, 24, திருச்சி சஞ்சய்தரன், வ/21, சென்னை எம்எம்டிஏ காலனி கார்த்திக், 30, ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். 1 இளஞ்சிறாரும் பிடிப்பட்டார். அவர்களிடமிருந்து 3 கத்திகள் மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகி உள்ள ஒரு பெண்ணை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட சிறுவன் உள்பட 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.