Take a fresh look at your lifestyle.

சென்னை எண்ணூரில் போலி மருத்துவர் கைது

120

ஊரக மற்றும் மருத்துவ சுகாதார சேவையின் இணை இயக்குநர் விஸ்வநாதன் என்பவர் எண்ணூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘சென்னை, எண்ணூர், நேதாஜி நகரில் சுதர்சன் குமார் என்பவர் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பட்டம் இல்லாமல் கிரிஜா கிளினிக் என்கிற பெயரில் பொது மக்களுக்கு மருத்துவம் செய்து வருகிறார். போலி மருத்துவரான அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்,

அந்த புகார் மனு மீது ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் உதவிக்கமிஷனர் சரவணக்குமார் மருத்துவ கண்காணிப்பு துறை அதிகாரிகளுடன் சென்று கிரிஜா கிளினிக்கில் ஆய்வு செய்தார். இதில் சுதர்சன் குமார் (வயது 52) மருத்துவம் படிக்காமலேயே கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு அலோபதி மருந்து எழுதியும், மாத்திரை மருந்து கொடுத்து வருவதும் தெரியவந்தது. அதனையடுத்து எண்ணூர் போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து அலோபதி மருந்துகள், ஆவணங்கள் மற்றும் ரூ.1,14,440- ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.