Take a fresh look at your lifestyle.

சென்னை அண்ணாசாலையில் 38 கிலோ கஞ்சா மற்றும் 25 கிலோ குட்கா பறிமுதல்

63

அண்ணாசாலை பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்த கடை ஊழியரை போலீசார் கைது செய்து, 38.6 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 25 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெருநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ (Drive against Drugs) மற்றும் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று (06.03.2023) காலை, வெங்கடேசன் 2வது தெரு, அண்ணாசாலை என்ற முகவரியிலுள்ள வீட்டில் குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டு, மேற்படி இடத்தில் சோதனைகள் மேற்கொண்டு 38.6 கிலோ எடை கொண்ட கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 25 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், ஸவாகத், விமல், பாபா உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து, மேற்படி சம்பவ இடத்தில் வேலை செய்து வந்த கஸ்ரத்தூரி, வ/28, த/பெ.நுனாசௌர் டோரி, கட்டோரியா அஞ்சல், பீஹார் மாநிலம் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவர் அண்ணாசாலையில் பீடா கடை நடத்தி வருவதும், சம்பவ இடத்திலுள்ள வீட்டில் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா பாக்கெட்டுகள் பெருமளவு பதுக்கி வைத்து, பீடா கடையில் வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதும், இங்கு மேற்படி எதிரி கஸ்ரத்தூரி சில மாதங்களாக வேலை செய்து, சட்டவிரோத விற்பனையில ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட மேற்படி எதிரி கஸ்ரத்தூரி விசாரணைக்குப் பின்னர் நேற்று (6.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள முக்கிய எதிரி சிக்கந்தர் என்பவரை பிடிக்க காவல் குழுவினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.