சென்னை, முகப்பேர், கோடம்பாக்கம், கொருக்குப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த 4 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 8.7 கிலோ கஞ்சா, 3 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, கோடம்பாக்கம் போலீசார் நேற்று கோடம்பாக்கம், அம்பேத்கர் சாலை மற்றும் ரத்தினாம்பாள் தெரு சந்திப்பு அருகே கண்காணித்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த சாலிகிராமத்தைச் சேர்ந்த ரசாக் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ எடை கொண்ட கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி ரசாக் மீது ஏற்கனவே 3 கஞ்சா வழக்குகள் உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் கொருக்குப்பேட்டை போலீசார் நேற்று (10.03.2023) இரவு கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர், இளைய முதலி தெருவில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வேலு (எ) அறுப்பு வேலு, 36 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.25 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி வேலு (எ) அறுப்பு வேலு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 3 கொலை முயற்சி வழக்குகள், 2 கஞ்சா வழக்குகள் உட்பட 18 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
அதே போல ஆர்.கே. நகர் போலீசார் சுண்ணாம்பு கால்வாய் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த அரவிந்தன், 23 என்பவரை கைது செய்து 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் அரவிந்தன் மீது ஏற்கனவே 3 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மேற்படி எதிரிகள் வேலு (எ) அறுப்பு வேலு மற்றும் அரவிந்தன் ஆகியோர் விசாரணைக்குப் பின்னர் இன்று (11.03.2023) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.