சென்னை 2,926 ரவுடிளிடம் நன்னடத்தைப் பிணைப்பத்திரம் பெற்று கமிஷனர் சங்கர்ஜிவால் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சென்னை பெருநரில் வரலாற்றுப் பதிவேடு ரவுடிகளை கண்காணிக்கும் நோக்கில் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மற்றும் சிறப்பு வாகனத் தணிக்கைகள் நடத்த கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் நேற்று முன்தினம் ஹிஸ்டரி ஷீட் ரவுடிகள், கொலை முயற்சி அல்லது 2க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்கும் பொளுக்கு எதிராக சிறப்பு சோதனைகள் மற்றும் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டனர். இந்தச் சோதனையில், 649 சரித்திர பதிவேடு ரவுடிகள் வீட்டுக்கு நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும், 3 சரித்திர பதிவேடு ரவுடிகளிடம் திருந்தி வாழ்வதற்கு நன்னடத்தை
பிணை பத்திரம் பெற்றும், 4 குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணை ஆவணம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது தவிர சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவித்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இதுவரை ஏற்கனவே 505 சரித்திரப் பதிவேடு ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளதும், மேலும் 2,426 சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகளிடம் இருந்து நன்னடத்தை பிணை பத்திரம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 29ம் தேதி இரவு சென்னை பெருநகரில் நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையில், 4,283 இருசக்கர, மூன்று சக்கர, லகுரக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. இதில் மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 10 வழக்குகளும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் இயக்கியது தொடர்பாக 52 வழக்குகளும் என மொத்தம் 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 62 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், Vaahan App மூலம் 289 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டது. இது தவிர Face Recognition
Software என்ற முக அடையாளத்தைக் கொண்டு பழைய குற்றவாளிகள் அடையாளம் காணும் FRS கேமரா மூலம் 2,648 நபர்கள் சோதனை செய்யப்பட்டு 2 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.