Take a fresh look at your lifestyle.

சென்னையில் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது * போதைக் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு ஜெயில்: கிரைம் கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை

72

சென்னை நகரில் 16 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளிகள் இருவருக்கு கோர்ட் 10 சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை கொறுக்குப்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தமிழக குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு டிஎஸ்பி சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர் ரேகா தலை மையில் போலீசார் நேற்று கொருக்குபேட்டை ரயில்வே இணைப்பில் கண்காணித்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது உள்ளே 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அவர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தேனியைச் சேர்ந்த முனியன் (எ) சலீம் மற்றும் அப்ரோஷ் கான் என்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த 2019ம் ஆண்டு 55 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான ராம்குமார், ராஜ்குமார் ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதத்துடன் 10 ஆண்டுகள் கடுங்காவல் விதித்தும், மற்ற 2 குற்றவாளிகளான யுவராஜ், பிரகாஷ் ஆகியோருக்கு தலா 25000 அபராதமும், 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும் அளித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு மற்றும் போதைப் பொருட்கள் வழக்குகள் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

சென்னை நகரில் கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை தமிழக குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார். மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மூலமாகவும் 94984 10581 என்ற எண்ணில் வாட்ஸ்அப் குறுந்தகவல், புகைப்படம் மூலமாகவும் மற்றும் spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.