Take a fresh look at your lifestyle.

சென்னையில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்

BJB CADER MURDER IN CHENNAI CHINDATHRIPET

81

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர். இவர் பாஜக எஸ்சி / எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்தார். இவருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்புக்காக காவலர் ஒருவரை வழங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று (24.5.2022) இரவு பாலசந்தர் தனது பாதுகா ப்புக்காக நியமிக்கப்பட்ட (பி.எஸ்.ஓ) பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றுள்ளார்.

அங்கு பாலசந்தர் நின்று பேசிக்கொண்டிருந்த போது பி.எஸ்.ஓ பாலருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்று விட்டார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடினர். போலீஸ் பாதுகாப்பில் இருந்த போதும், எப்போதும் ஜேஜே என ஜன நெருக்கடி மிகுந்த சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.