சென்னையில் பரவும் கிப்ட் கார்டு மோசடி: எச்சரிக்கும் சென்னை சிசிபி சைபர்கிரைம் போலீஸ்
gift card fraud cyber crime awareness
அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்பிலுள்ள நபர்கள் ஆகியோரின் படங்களை வாட்ஸ்அப் Display Picture ஆக பயன்படுத்தி சக அதிகாரிகள் மற்றும் பணிபுரியும் அலுவலர்களை தொடர்பு கொண்டு அமேசான் கிப்ட் கார்டுகளை வாங்கி அனுப்புமாறு கூறுதல் மற்றும் பணம் அனுப்ப கூறுதல் போன்ற குற்றங்கள் தற்போது நிகழ்ந்து வருகிறது.
எனவே பொதுமக்கள் எவரும் தங்களுக்கு தெரிந்த அதிகாரியின் புகைப்படத்துடன் தெரியாத மொபைல் எண்ணிலிருந்து வரும் வாட்ஸ் அப் மெசேஜ்களையோ, ஈமெயில்களையோ, அல்லது பேஸ்புக் மெசெஞ்சர் மெசேஜ்களையோ நம்பி பணமோ அல்லது கிப்ட் கார்டுகளோ அனுப்ப வேண்டாம் என்றும் அத்தகைய மெசேஜ்களை புறக்கணிக்குமாறும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மோசடி ஆசாமிகள் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் புலனாய்வு மேற்கொண்டு இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.