Take a fresh look at your lifestyle.

சென்னையில் காவல் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய கமிஷனர் சங்கர்ஜிவால்

55

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு மற் றும் புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானம் ஆகிய 3 இடங்களில் காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருக்காக நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

எழும்பூர், ராஜரத்தினம் மைதானம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் நேற்று (14.01.2023) மாலை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு, பொங்கலிட்டு காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடினார். பின்னர் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு, காவல் ஆளிநர்கள், அவரது குடும்பத் தினருக்கான கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உறியடித்தல், மல்லர் கம்பம் போன்ற விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து கண்டுகளித்தார்.

மேலும், ஆயுதப்படை ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் பரதநாட்டியம், சிலம்பம், கிராமிய நடனம், குழந்தைகள் நடனம், பறை இசை நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து, பொங்கல் நிகழ்ச்சியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு கோப்பைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற காவல் ஆளிநர்களுக்கு பரிசுகளை காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு

இதனைத் தொடர்ந்து கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்கள் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் சங்கர்ஜிவால் கலந்து கொண்டார். காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கலிட்டு பொங்கல் கொண்டாடினார். பின்னர் காவலர்கள் குடும்பத்தினருக்கான கோலப் போட்டியை பார்வையிட்டு, காவலர்கள் குடும்ப குழந்தைகள் பங்கேற்ற பரதநாட்டியம், சிலம்பம், கராத்தே போன்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார். பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானம்

மேலும் சென்னை, பெருநகர ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆளிநர்கள் சார்பாக புனித தோமையர் மலை, ஆயுதப்படை மைதானத்தில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டு கமிஷனர் பொங்கல் கொண்டாடினார். அங்கு கிராமிய கலை நயத்துடன் அமைக்கப்பட்டிருந்த குடில்கள், கடைகள் மற்றும் அரங்குகளை காவல் ஆணையாளர் அவர்கள் ரசித்து பார்வையிட்டார். காவலர்கள் குடும்பத்தினருக்கான கோலப்போட்டி, உறியடித்தல், பரதம், துப்பாக்கிகள் கொண்டு சாகசம் போன்ற விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தும், காவல் குடும்பத்தினர் நிகழ்த்திய இசை நிகழ்ச்சி, கரகாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் மற்றும் குடும்ப குழந்தைகள் நடத்திய கலை நிககழ்ச்சிகளையும் கண்டுகளித்தார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் முனைவர் J.லோகநாதன், (தலைமையிடம்) பிரேம் ஆனந்த் சின்கா (தெற்கு), இணை ஆணையாளர்கள் சாமூண்டீஸ்வரி, சிபிசக்ரவர்த்தி இ.கா.ப (தெற்கு மண்டலம்), திஷாமிட்டல் (கிழக்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள் ரஜத் சதுர்வேதி, தேஷ்முக் சேகர் சஞ்சய் (திருவல் லிக்கேணி), கோபி, (கீழ்ப்பாக்கம்), அருண் கபிலன் (தி.நகர்), மருத்துவர். தீபக்சிவச் (புனித தோமையர் மலை), மகேந்திரன் (அடையார்), ராமமூர்த்தி (நிர்வாகம்) ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை-2), கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு), காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.