Take a fresh look at your lifestyle.

சென்னையில் கஞ்சா விற்பனையில் காவலர்கள்: போலீசார் விசாரணையில் திடுக் தகவல்கள்

100

கஞ்சா விற்பனையில் டிஜிபி அலுவலகம் மற்றும் ரயில்வே டிஎஸ்பி அலுவலக காவலர்களுக்கு தொடர்பிருப்பது கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனரின் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சென்னை அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கீழ்ப்பாக்கம் துணைக் கமிஷனரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அதன் தொடர்ச்சியாக முகப்பேர், ஜெஜெ நகரைச் சேர்ந்த
திலீப்குமார் (39) என்ற வாலிபரை 1 கிலோ கஞ்சாவுடன் போலீசார்வ்மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக தெரிவித்தார். அவருக்கு கஞ்சா எங்கு கிடைத்தது என்பது குறித்து நடத்திய விசாரணையில் போலீசாருக்குப்அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

திலிப்குமாருக்கு சென்னை டிஜிபி அலுவலகத்தில் முக்கிய டிஜிபி ஒருவரிடம் வேலை பார்க்கும் காவலர் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய டிஎஸ்பி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ரைட்டர் ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் திலீப்குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த இரண்டு காவலர்களையும் தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற பெயரில் டிஜிபி சைலேந்திரபாபு தமிழகத்தில் கஞ்சா வேட்டை நடத்தி நடத்தி வருகிறார். இன்னிலையில் காவல்துறையைச் சேர்ந்தவர்களே கஞ்சா விற்பனை செய்யும் சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பிடிபட்டுள்ள இரண்டு காவலர்களும் விசாரணைக்குப் பின் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் மீது விரைவில் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என தெரிகிறது.