Take a fresh look at your lifestyle.

சென்னையில் ஒரே நாள் அதிரடி ரெய்டில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கும்பல் கைது

121

சென்னை தரமணி, கொடுங்கையூர் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 6 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13.2 கிலோ கஞ்சா, 1 ஆட்டோ மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் நேற்று (25.03.2022) காலை சுமார் 10 மணியளவில் தரமணி, கானகம் சாலை, பிள்ளையார் கோயில் ரேஷன் கடை அருகே கண்காணிப்பு பணியில் இருந்தனர். அப்து, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனையடுத்து சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த திரிபுராவைச் சேர்ந்த ரட்டன் டெபர்மா (40), சமீர் டெபர்மா (27), அனர் உசைன் (30) ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கொடுங்கையூர் போலீசார் நேற்று காலை 7.30 மணியளவில் கொடுங்கையூர் M.R நகர் சந்திப்பு அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய கொறுக்குப்பேட்டையைச் சேர்ந்த யஷ்வந்த் பாபு (எ) யஷ்வந்த் (30), பிரபாகரன் (எ) அன்னக்கூடை பிரபாகரன் (29), ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ, 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மதுரவாயல் போலீசார் நேற்று (25.3.2022) பிற்பகல் சுமார் 1 மணியளவில் மதுரவாயல் தனலட்சுமி நகர், 3வது தெரு, ஏரிக்கரை கரையோரம் பகுதியில் கஞ்சா விற்ற ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த ஜெய்தீப் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ200 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.